செய்திகள்

'அவதார் 2' டிரெய்லர் குறித்த தகவல்

அவதார் 2 டிரெய்லர் வருகிற மே 6 ஆம் தேதி வெளியாகும் டாக்டர் ஸ்டிரேஞ்ச் படத்துடன் வெளியாகவுள்ளது. 

DIN

'வலிமை' அப்டேட்டுக்கு நாம் காத்திருந்தது போல உலக அளவில் 'அவதார் 2' பட அப்டேட்டுக்கு காத்துக்கிடக்கிறார்கள். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அவதார் 2 பட டிரெய்லர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

மார்வெலின் 'டாக்டர் ஸ்டிரேஞ்ச்' திரைப்படம் வருகிற மே 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்துடன் 'அவதார் 2' திரைப்படத்தின் டிரெய்லர் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 'அவதார் 2' படத்தை தயாரித்துள்ள டிவெண்டித் செஞ்சுரி நிறுவனம், இந்தப் படம் உறுதியாக இந்த ஆண்டு இறுதியில் திரைக்குவரும் என்று தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT