முகப்பு
செய்திகள்

'ஏகே 62'க்காக நடிகர் அஜித் பெற்ற சம்பளம் இத்தனை கோடியா ? ஆச்சரிய தகவல்

ஏகே 62 படத்துக்காக நடிகர் அஜித் பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

செய்திகள்

'ஏகே 62'க்காக நடிகர் அஜித் பெற்ற சம்பளம் இத்தனை கோடியா ? ஆச்சரிய தகவல்

ஏகே 62 படத்துக்காக நடிகர் அஜித் பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

'வலிமை' படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தற்போது 'ஏகே 61' படத்தில் நடிக்கவிருக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் துவங்கப்படவிருக்கிறது. 

இதனையடுத்து லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் 'ஏகே 62' படத்தில் அஜித் நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அடுத்தடுத்து நடிகர் அஜித் பட அறிவிப்புகள் வெளியாவது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், நடிகர் அஜித் இந்தப் படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் கேட்டதாகவும், லைக்கா நிறுவனம் அவருக்கு ரூ.105 கோடி சம்பளம் நிர்ணயித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என ஆண்டு அடுத்த ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் அறிக்கையில் அவரது பெயர் இடம்பெறவில்லை. 

இந்த நிலையில் ஏகே 63 படம் குறித்தும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஏகே 63 படத்தை சிறுத்தை சிவா இயக்கவிருப்பதாகவும் நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

'ராஜா' படத்தின்போது நடிகர் வடிவேலுவுக்கும் நடிகர் அஜித்துக்கும் உருவான மனக் கசப்பின் காரணமாக அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்காதது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →