செய்திகள்

சிம்பு - ஹன்சிகா இணைந்து நடித்துள்ள 'மஹா' வெளியிட்டுத் தேதி அறிவிப்பு

சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ஹன்சிகாவின் 50வது படமான மகா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஹன்சிகாவின் 50வது படமான 'மஹா' படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. யு.ஆர்.ஜமீல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

நடிகர் சிம்பு இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் உருவாகி 2 ஆண்டுகளாக வெளியாகமல் இருந்த நிலையில் இந்த வெளியீட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

'வாலு' படத்துக்கு பிறகு சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளனர். 'வாலு' படத்தில் நடிக்கும்போது இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் நெல்சனின் 'வேட்டை மன்னன்' படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். சில காரணங்களால் அந்தப் படம் முடிவடையாமல் இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி வாகனங்களை அரசு முறையாக ஆய்வு செய்கிறதா?

"உங்களுடன் ஸ்டாலின்" முதல்வர் பெயருக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம் | செய்திகள் சில வரிகளில்|6.8.25

டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்!

பாகிஸ்தானில்.. இம்ரான் கானை விடுவிக்கக்கோரி சுதந்திர நாளன்று 2-ம் கட்ட போராட்டம்!

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்!

SCROLL FOR NEXT