செய்திகள்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்துக்கு இத்தனை கோடி வசூலா ? ஆச்சரிய தகவல்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு கிடைத்த மொத்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

DIN

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் 'எதற்கும் துணிந்தவன்' கடந்த மார்ச் 10 ஆம் தேதி வெளியானது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

'ஜெய்பீம்' படத்துக்கு பிறகு சூர்யா இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். பொள்ளாச்சி குற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், சூரி, புகழ், இளவரசு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படத்தின் மொத்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படம் ரூ.179 கோடி வசூலித்துள்ளதாம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிப்பு!

தேடல்... ஈஷா ரெப்பா!

நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!

பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராகிறார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை?

ஹாட்ரிக் வெற்றியைக் கொடுப்பாரா மோகன்லால்? ஹிருதயப்பூர்வம் டிரைலர்!

SCROLL FOR NEXT