செய்திகள்

நடிகர் ஆதியுடன் நிச்சயதார்த்தம்: புகைப்படங்களை பகிர்ந்து இன்ப அதிர்ச்சியளித்த நிக்கி கல்ராணி

ஆதியுடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை நடிகை நிக்கி கல்ராணி பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

DIN

'யாகவராயினும் நா காக்க', 'மரகத நாணயம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணியும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கூறப்பட்டது. 

இருவரும் குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டு அந்தத் தகவலை உறுதிபடுத்தினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆதி மற்றும் நிக்கி கல்ராணிக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

ஆனால் இருவரும் இதுகுறித்து மௌனம் காத்துவந்தனர். இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணி தனது நிச்சயதாரர்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது பதிவில், நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன் எங்களுக்குள் காதலை உணர்ந்தோம். தற்போது அதிகாரப்பூர்வமாக நடந்திருக்கிறது. 24.03.2022 - இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது.

இரு குடும்பத்தார் முன்னிலையில் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. உங்கள் ஆசிர்வாதங்களுடன் எங்களது பயணத்தை துவங்கவிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் வாழ்த்து தெரிவத்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT