செய்திகள்

''தமிழுக்கும் இசைக்கும்...'': ரஹ்மானின் பாடல் குறித்து முதல்வர் கருத்து

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூப்பில்லா தமிழே தாயே பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.  

DIN

தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமைகளை சொல்லும்  விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'மூப்பில்லா தமிழே தாயே' என்ற பாடலை உருவாக்கியுள்ளார். பாடலாசிரியர் தாமரை இந்தப் பாடலை எழுதியுள்ளார். 

இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா, பூவையார் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலை அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்தப் பாடல் யூடியூபில் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. 

இந்த நிலையில் சர்வதேச தொழில் கண்காட்சியில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபை சென்றுள்ளார். முதல்வரை தனது ஸ்டுடியோவுக்கு அழைத்து 'மூப்பில்லா தமிழே தாயே' பாடலை அவருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் காண்பித்துள்ளார்.

அப்போது அவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், ''துபை சர்வதேச தொழில் கண்காட்சியை பார்வையிட சென்ற என்னை நண்பர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டுடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள மூப்பில்லா தமிழே தாயே ஆல்பத்தைக் காண்பித்தார். தமிழுக்கும், இசைக்கும் உலகில் எல்லை இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT