செய்திகள்

ஆண் குழந்தைக்கு அம்மாவான ஆல்யா: பெயர் இதுதானாம்: வெளியான புகைப்படம்

ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

DIN

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஆல்யா மானஸா மற்றும்  சஞ்சீவ் கார்த்திக் ஜோடி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு  ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. 

ஆல்யா ராஜா ராணி 2 தொடரில் சந்தியா என்ற வேடத்திலும் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரிலும் நடித்து வந்தனர். இந்த நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யா, சமீபத்தில் ராஜா ராணி 2 தொடரிலிருந்து விலகினார். 

ஆல்யாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சஞ்சீவ் கையில் குழந்தையுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்த ஆல்யா, ''எங்கள் குடும்பம் இளவரசி ஐலா மற்றும் புதிய குட்டி இளவரசன் அர்ஷ் ஆகியோரால் நிறைவாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் ஆல்யா ராஜா ராணி 2 தொடரில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

எம் & எம் விற்பனை 16% உயா்வு

துணை நடிகை மீது தாக்குதல்: வியாபாரி கைது

SCROLL FOR NEXT