செய்திகள்

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்

கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் வென்றார். 

DIN

கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் வென்றார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94ஆவது ஆஸ்கர் விருது வங்கும் விழா நடைபெற்று வருகிறது. அதில் அமெரிக்கத் திரைப்படமான டியூன் திரைப்படத்திற்கு 6 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவு, இசை, விஷூவல் எஃபெக்ட்ஸ், ஒரிஜினல் ஸ்கோர், படத்தொகுப்பு, புரொடக்சன் டிசைனிங் ஆகிய பிரிவுகளில் இந்த விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. 
மேலும் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித்தும், சிறந்த துணை நடிகருக்கான விருதை டிராய் கோட்சூரும் வென்றனர். கிங் ரிச்சர்ட் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை ஜெஸ்ஸிகா கேஸ்டைன் தட்டிச் சென்றார். தி ஐஸ் ஆஃப் டாமி ஃபேய் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ஜெஸிகா கேஸ்டைனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. 

சிறந்த இயக்குநருக்கான ஆஸகர் விருதை ஜேன் கேம்பியன் வென்றார். தி பவர் ஆஃப் தி டாக் திரைப்படத்தை இயக்கியதற்காக ஜேன் கேம்பியனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது 'டிரைவ் மை கார்' படத்துக்கு கிடைத்துள்ளது. ஜப்பான் நாட்டு திரைப்படமான இந்த படத்தை யூசுக் ஹமாகுச்சி இயக்கி உள்ளார். 
சிறந்த துணை நடிகைக்கான விருது அரியனா டிபோஸுக்கு வழங்கப்பட்டது. வெஸ்ட் சைடு ஸ்டோரி படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 'க்ரூல்லா' திரைப்படத்திற்காக ’ஜென்னி பெவன்’ வென்றார். சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை கோடா திரைப்படம் தட்டிச் சென்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.07 கோடி

முனிச்சாலை மதுக் கடையை அகற்றக் கோரி வழக்கு: ஆா்டிஓ ஆய்வுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

துணை தோ்தல் ஆணையராக ஞானேஷ் பாரதி நியமனம்

பெண்கள் பாதுகாப்புக்குக் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்: ஆட்சியா் எச்சரிக்கை

ஆலங்குடி அருகே லாரி மோதி சிறுமி உயிரிழப்பு

SCROLL FOR NEXT