முகப்பு
செய்திகள்

நெல்சனின் 'தலைவர் 169' படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன்?

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:49 AM
பகிர்:

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தின் முன் கட்ட தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு மகளாக அவர் நடிக்கிறாராம். 

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இயக்குநர் நெல்சனின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகும் என்று தெரிகிறது. நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தைக் காண நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.