செய்திகள்

''நான் செய்தது தவறு'': கன்னத்தில் அறைந்ததற்காக வருத்தம் தெரிவித்த வில் ஸ்மித்

தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்ததற்காக நடிகர் வில் ஸ்மித் வருத்தம் தெரிவித்துள்ளார். 

DIN

'கிங் ரிச்சர்டு' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை நடிகர் வில் ஸ்மித் பெற்றார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித்தை கிண்டலடிக்கும் விதமாக கருத்து தெரிவித்தார். 

இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடை மீது ஏறி கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். பின்னர்,  'என் மனைவி குறித்து இனி நீ பேசக் கூடாது' என ஆவேசமாக பேசினார். இதனையடுத்து உலக அளவில் வில் ஸ்மித்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.

இந்த நிலையில் வில் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், வன்முறை என்பது எந்த வகையிலும் தவறான ஒன்றுதான். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் எனது செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. மன்னிக்க முடியாததும் கூட. 

என்னுடைய மனைவியின் மருத்துவ நிலை குறித்த நகைச்சுவையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கிறிஸ். நான் செய்தது தவறு. அன்பும் கருணையும் நிறைந்த இந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. 

விருது நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், இதனை பார்க்கும் உலக மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT