செய்திகள்

'தகதகன்னு மின்னலாம்...' காதலியை கரம்பிடித்த 'வலிமை' நடிகர்: திருமண புகைப்படங்கள்

'வலிமை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த துருவனின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

DIN

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'வலிமை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த துருவனுக்கும், அஞ்சலி என்பவருக்கும் கடந்த மார்ச் 28 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 

இவர்களது திருமணம் கேரள மாநிலம் பாலக்காட்டில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனையடுத்து துருவன் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் துருவன் 'வலிமை' படத்தில் வில்லனாக கார்த்திகேயாவின் நண்பராக அமித் என்ற வேடத்தில் நடித்திருந்தார். வலிமை படத்தில் கார்த்திகேயா என காவல்துறையினர் தவறுதலாக அமீத்தை பிடிக்கும் காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

'வலிமை' துருவனுக்கு முதல் தமிழ் படம் . முன்னதாக 'குயின்', 'ஆராட்டு, உள்ளிட்ட மலையாளப் படங்களில் துருவன் நடித்துள்ளார். தற்போது பிருத்விராஜுடன் இணைந்து 'ஜன கன மன' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

முன்னதாக வலிமையில் வில்லனாக நடித்திருந்த கார்த்திகேயாவுக்கு லோகிதா என்வபருடன் கடந்த ஆண்டு நவம்பரில் ஹைதராபாத்தில் காதல் திருமணம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT