செய்திகள்

மாஸ்டர் விஜய் பாணியில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த ஷாருக்கான்: வைரல் படம்

ரமலான் பண்டிகையையொட்டி தனது இல்லம் முன்பு குவிந்த ரசிகர்களுடன் ஷாருக்கான் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN


ரமலான் பண்டிகையையொட்டி தனது இல்லம் முன்பு குவிந்த ரசிகர்களுடன் ஷாருக்கான் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதுமுள்ள இஸ்லாமியர்களால் ஈகைத் திருநாளான ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், பாலிவுட் சினிமாத் துறையை சேர்ந்த பிரபலங்கள் தங்களது இல்லங்களில் ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

ரமலான் பண்டிகையையொட்டி ஷாருக் கான் ரசிகர்கள் அவரது இல்லம் முன்பு குவிந்தனர். அவர்களைச் சந்தித்த ஷாருக்கான் ரசிகர்களை நோக்கி கையசைத்து ரமலான் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

மாடியில் நின்று ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான்

 ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால், மாடியிலிருந்தவாறே ரசிகர்களை பார்வையிட்ட ஷாருக் கான் அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்படத்தில் ஷாருக்கான் பின்புறம் ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் குவிந்திருந்ததால், அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது பேருந்து மீது நின்று நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

விஜய் மற்றும் ஷாருக் கானின் இவ்விரு புகைப்படங்களையும் ஒப்பிட்டு தென்னிந்திய கிங் - வடஇந்திய கிங் என்று குறிப்பிட்டு ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT