செய்திகள்

'தனுஷ் என் சகோதரன் என்பதை மறக்க வேண்டும்': செல்வராகவன் கருத்து

நடிகர் தனுஷ் எனக்கு சகோதரன் என்பதையே அடிக்கடி மறக்க வேண்டும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

DIN

நடிகர் தனுஷ் எனக்கு சகோதரன் என்பதை அடிக்கடி மறக்க வேண்டும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் 'தி கிரே மேன்' எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

'காதல்கொண்டேன்', 'மயக்கம் என்ன' ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக 'நானே வருவேன்' திரைப்படத்தில் தனுஷ் - செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்துள்ளனர். இதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு இயக்குநர் செல்வராகவன் பேட்டி அளித்தார். அப்போது தனுஷ் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தனுஷ் என் சகோதரன் என்பதையே அடிக்கடி மறக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், தனுஷ் போன்ற நடிகர்களை கையாளும்போது சகோதரன் என்ற உணர்வை அடிக்கடி மறக்க வேண்டும். இதனை நான் ஒவ்வொருமுறையும் நினைவுபடுத்திக்கொள்கிறேன். தனுஷ் நிறைய சாதித்தவர். அவரோடு பணிபுரிந்த ஓரிரு படங்களில் சிலவற்றை அவருடன் பகிர்ந்தேன். ஆனால் தற்போது அவர் அடைந்த இலக்குகள் எல்லாம் அவருடைய தனிப்பட்ட முயற்சிதான் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

மகா மாரியம்மன், காமாட்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

அரசுத் திட்டங்களால் உயா் கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்

விநாயகா் சிலைகள் விஸா்ஜனம்

SCROLL FOR NEXT