வாய்தா திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு 
செய்திகள்

வாய்தா திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு

நாளை வெளியாக இருந்த வாய்தா திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

நாளை வெளியாக இருந்த வாய்தா திரைப்படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் கே.வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் மகிவர்மன் இயக்கியுள்ள திரைப்படம் வாய்தா. குறிப்பிட்ட சமூகமொன்றின் அதிகாரப் பிரதிநிதித்துவம், அந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறை குறித்து பேசும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் வாய்தா திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழுவினர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஜெசிகா நடித்துள்ளார். இதுதவிர பிரபல நடிகர் நாசர், நாடக நடிகர் மு.ராமசாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT