செய்திகள்

விஜய் 66 படத்தில் புதிதாக இணையும் இரண்டு பிரபலங்கள்

விஜய் நடிக்கும் 66வது படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

DIN

விஜய் நடிக்கும் 66வது படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், சரத்குமார், யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ஏற்கெனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.6 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா் கைது

2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்பு

எச்எஸ்பிசி வங்கியின் இந்தியப் பிரிவு: 2025-இல் 1,900 கோடி டாலா் லாபம்

மாநிலங்களவை தோ்தல்: சுயேச்சை மனு தாக்கல்

இனி மாணவா்களுக்கு மத்தியில் நல்லகண்ணு! தானமாகும் உடல் பாடமாவது எப்படி?

SCROLL FOR NEXT