செய்திகள்

ஓட்டு வீட்டிலிருந்து சொந்த வீடு: பிக் பாஸ் பிரபலம் உருக்கம்

ஏங்குன காலம் எல்லாம் இருக்கு... ஓட்டு வீட்டுல பிறந்து வளர்ந்த...

DIN

செய்தி வாசிப்பாளரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான அனிதா சம்பத், பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். விமல் நடித்து வரும் தெய்வ மச்சான் படத்தில் அனிதா சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இந்நிலையில் சமீபத்தில் சொந்த வீடு வாங்கியது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவு எழுதியுள்ளார் அனிதா சம்பத். அதில் அவர் கூறியதாவது:

கடைசியாக. வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு. வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா... பெட்ரூம் வச்ச வீட்டுக்குப் போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு... ஓட்டு வீட்டுல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான். இன்னக்கி எங்களுக்குப் பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டுக் கனவை நினைவாக்கி விட்டோம். நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒருநாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும். இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன். இதை படிக்கிற நீங்க எல்லாருமே சீக்கிரம் வீடு வாங்குவீங்க. எங்க சார்பா அதற்கான வாழ்த்துகள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT