செய்திகள்

மீண்டும் இணையும் ‘களத்தில் சந்திப்போம்’ கூட்டணி

களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

DIN

களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

நடிகர்கள் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் களத்தில் சந்திப்போம். இயக்குநர் ராஜசேகர் இயக்கிய இந்தத் திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் ராஜசேகர் நடிகர் ஜீவா மீண்டும் இணைய உள்ளனர். களத்தில் சந்திப்போம் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா, இயக்குநர் ராஜசேகர் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. 

நடிகர் அஜித்குமார் திரைப்படத்திற்கு இசையமைத்துவரும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பிற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் முக்கிய கதாபாத்திரங்களுக்கான தேர்வும் நடைபெற்று வருகிறது.

இந்தத் திரைப்படத்தை MIK புரொடக்‌ஷன்ஸும் 7 Miles per Second நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

காரிய வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

SCROLL FOR NEXT