ஐக்கிய அரபு அமீரக அதிபரும் துபை ஆட்சியாளருமான ஷேக் காலிஃபா பின் சயீது தனது 73-வது வயதில் காலமானார்.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் அமீரகத்தின் அதிபராகவும் துபை ஆட்சியாளராகவும் ஷேக் காலிஃபா பொறுப்பு வகித்தார். அவருடைய மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதிபர் ஷேக் காலிஃபா பின் சயீத்தின் மறைவுக்கு இந்திய அரசு சார்பில் இன்று ஒருநாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஷேக் காலிஃபாவின் மறைவுக்குப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
இந்தியாவிலுள்ள அனைவரும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் கடவுளுக்குச் சொந்தமானவர்கள், கடவுளிடமே திரும்புவோம்... ஷேக் காலிஃபா பின் சயீது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.