செய்திகள்

கமல் ஹாசனை இயக்கும் பா. இரஞ்சித்: அறிவிப்பு

கமல் ஹாசன் நடிக்கும் படத்தை விரைவில் இயக்கவுள்ளார் பா. இரஞ்சித்.

DIN

கமல் ஹாசன் நடிக்கும் படத்தை விரைவில் இயக்கவுள்ளதாகப் பிரபல இயக்குநர் பா. இரஞ்சித் அறிவித்துள்ளார்.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். சார்பட்டா பரம்பரைக்கு அடுத்ததாக நட்சத்திரம் நகர்கிறது என்கிற காதல் படமொன்றை இயக்கி வருகிறார். இதற்கடுத்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் பா. இரஞ்சித்.

இந்நிலையில் கமல் ஹாசன் நடிக்கும் படத்தை விரைவில் இயக்கவுள்ளார் பா. இரஞ்சித். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். கமல் நடித்த விக்ரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பா. இரஞ்சித், கமல் ஹாசன் சாருடன் இணைந்து விரைவில் பணியாற்றப் போகிறேன். மிகவும் ஆர்வத்துடன் உள்ளேன். அவரை வைத்து ஒரு மதுரைப் படம் பண்ணவே ஆசை. அவர் நடித்த விருமாண்டி எனக்குப் பிடித்த படம் என்றார். 

கமல் - பா. இரஞ்சித் என இரு மாபெரும் கலைஞர்கள் இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய-மாநில உறவுகள்: உயர்நிலைக் குழு ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12.98 லட்சம் வாக்காளா்கள்

அதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கம்

தில்லியில் குப்பை மலைகளின் உயரம் குறைந்து வருகிறது: முதல்வா் ரேகா குப்தா

தஞ்சாவூா் மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளா்கள்: 1.47 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT