'மைக் மீது நம்பிக்கையில்லை': விக்ரம் பட விழாவில் பார்த்திபன் செய்த செயல்
விக்ரம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் 'மைக் வேண்டாம் அதன் மீது நம்பிக்கையில்லை' என்று மேடையில் இருந்த மைக்கில் நடிகர் பார்த்திபன் பேசினார்.
விக்ரம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் 'மைக் வேண்டாம் அதன் மீது நம்பிக்கையில்லை' என்று மேடையில் இருந்த மைக்கில் நடிகர் பார்த்திபன் பேசினார்.
'இரவின் நிழல்' திரைப்படத்தின் இசை அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கோபமடைந்து மைக்கை தூக்கி எறிந்த விடியோ குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவர் இவ்வாறு செய்துள்ளார்.
படிக்க | ரஜினியைப் போல மு.க.ஸ்டாலின்: கமல்ஹாசன் பேச்சு
Advertisement
Advertisement
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே 15) நடைபெற்றது.
இதில் நடிகர் பார்த்திபன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது நடிகர் பார்த்திபனை பேச அழைத்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட மைக்கை பார்த்திபன் மறுத்துவிட்டார். 'மைக் வேண்டாம் அதன் மீது நம்பிக்கையில்லை' எனக் கூறிவிட்டு, மேடையில் இருந்த நிலையான மைக்கில் அவர் பேசினார்.
சிறிய சிறிய செயல்களை சுவாரசியமாக செய்யும் பார்த்திபனின் இந்த செயல் அரங்கத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி பலரை வெகுவாக கவர்ந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.