விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ஏன்? புதிய தகவலைப் பகிர்ந்த கமல்ஹாசன் 
செய்திகள்

விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ஏன்? புதிய தகவலைப் பகிர்ந்த கமல்ஹாசன்

விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளது தொடர்பாக புதிய தகவலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

DIN

விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளது தொடர்பாக புதிய தகவலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன்  நடித்துள்ள படம் - விக்ரம். கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் போன்றோர் நடித்துள்ளார்கள். ஜுன் 3 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் டிரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியானது.

இப்படத்தில் சூர்யா நடித்திருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் இதனைத் உறுதி செய்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மேலும் சூர்யாவுடன் படக்குழுவினர் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா இறுதி நிமிடங்களில் தோன்றுவார் எனத் தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர், “திரைப்படத்தின் இறுதி நிமிடங்களில் சூர்யா தோன்றுவார். அது திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கு கொண்டு செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள நிலையில் தற்போது சூர்யாவும் இணைந்துள்ளது அனைவரின் மத்தியிலும் ஆவலைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

SCROLL FOR NEXT