செய்திகள்

பா. இரஞ்சித்தின் அடுத்த படம் அறிவிப்பு

இயக்குநர் பா. இரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் பா. இரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். சார்பட்டா பரம்பரைக்கு அடுத்ததாக நட்சத்திரம் நகர்கிறது என்கிற காதல் படமொன்றை இயக்கி வருகிறார். இதற்கடுத்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் பா. இரஞ்சித். இதையடுத்து கமல் ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகச் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் வேட்டுவம் என்கிற படம் மற்றும் இணையத் தொடரை இயக்கவுள்ளார் பா. இரஞ்சித். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. நீலம் ஸ்டூடியோ மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளன. சிறையில் ஒருவர் எதிர்கொள்ளும் அனுபவங்களும் அந்த நபரின் பின்னணியும் வேட்டுவம் படத்தின் கதையாக இருக்கும் என அறியப்படுகிறது. இதன் முதல் பாகம் படமாகவும் இதர பாகங்கள் இணையத்தொடராகவும் வெளிவரவுள்ளன. 

இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அடுத்த வருடம் வேட்டுவம் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

SCROLL FOR NEXT