செய்திகள்

வெளியானது நயன்தாரா நடிக்கும் ஓ2 படத்தின் ‘சுவாசமே..’ பாடல்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஓ2 திரைப்படத்தின் முதல்பாடலான ‘சுவாசமே’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.

DIN

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஓ2 திரைப்படத்தின் முதல்பாடலான ‘சுவாசமே’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜி.எஸ். விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, குழந்தை நட்சத்திரம் ரித்விக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் படம் ஓ2. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே மாயா, ஐரா ஆகிய திரில்லர் படங்களில் நடித்துள்ள நயன்தாரா தற்போது மீண்டும் திரில்லர் பாணி கதையில் நடித்துள்ளார். 

இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இணைந்து 'ட்ரீம் வாரீர் பிக்சர்ஸ்' மூலம் தயாரித்துள்ளனர். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்துள்ளார். 

முன்னதாக இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் முதல் பாடலான ‘சுவாசமே’ பாடல் லிரிக் விடியோவாக வெளியாகியுள்ளது.

இத்திரைப்படம் 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' ஓடிடி செயலியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியா நான்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உணவு தருவதாகக் கூறி... காரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு - புகைப்படங்கள்

மகளிர் உலகக்கோப்பை: பாக். எதிராகப் போராடி ரன் சேர்த்த இந்தியா! 248 ரன்கள் இலக்கு!

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்!

கண் ஜாடை... லட்சுமி பிரியா!

SCROLL FOR NEXT