முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஓடிடி வெளியீடு அறிவிப்பு

ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற டான் படம் 12 நாள்களில் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை அள்ளியதாக...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:23 AM
பகிர்:

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் நெட்பிளிஸ்க் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்த டான் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சிக்ரவர்த்தி இயக்கினார். இசை - அனிருத். டாக்டர் படத்துக்குப் பிறகு இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார் ப்ரியங்கா மோகன். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, முனிஷ்காந்த் போன்றோரும் டான் படத்தில் நடித்தார்கள். 

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற டான் படம் 12 நாள்களில் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை அள்ளியதாக அதிகாரபூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் டான் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜூன் 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →