முகப்பு
செய்திகள்

நான் அடிக்கிற அடி மரண அடியா தான் இருக்கும்: வெளியானது 'தி லெஜண்ட்' டிரைலர்

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் டிரைலவர் வெளியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் டிரைலவர் வெளியானது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றவருமான லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 

இப்படத்தில் ஊர்வசி ரெளடேலா, கீத்திகா, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். 

மொசலோ மொசலு, வாடிவாசல் என இப்படத்தின் இரு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற்றது. 

பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். விழாவில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை படக்குழு வெளியிட்டது. தற்போது இந்த டிரைலர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →