ஆவணப்படம், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் 17வது பதிப்பு (மே-29) மும்பை வொர்லியில் உள்ள நேரு மையத்தில் தொடங்கப்பட்டது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படப் பிரிவு ஏற்பாடு செய்த ஏழு நாள் விழாவைத் தொடங்கி வைத்தார். விரிவான பங்கேற்பை ஊக்குவிக்க, இத்திரைப்பட விழா ஹைப்ரிட் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் https://miff.in இல் பதிவுசெய்த அனைவருக்கும் திரைப்படங்களை ஆன்லைனில் பார்ப்பது இலவசம் என்று விழா இயக்குனர் ரவீந்திர பாகர் கூறினார்.
இதில் ‘தோபி காட்’ எனும் ஆவணப்படம் ஜூன் 1ஆம் தேதி மாலை 3.45மணிக்கு திரையிடப்படுகிறது. இப்படத்தை கே.எஸ்.ஸ்ரீதர் எடுத்துள்ளார்.
இது மும்பையின் தோபி காட் பகுதியில் வாழும் சலவைத் தொழிலாளர்கள் பற்றியது. அவர்களின் தினசரி வாழ்கை குறித்து எடுக்கப்பட்ட முக்கியமான ஆவணப்படமாக கருதப்படுகிறது.
வெட்ட வெளியில் 130 வருடமாக அப்பகுதி மக்கள் சலவைத் தொழிலை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.