செய்திகள்

யுவன் எங்கே செல்கிறார்? வைரலாகும் புதிய புகைப்படம்!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

DIN

1997-ல் அரவிந்த் படத்தில் அறிமுகமான யுவன், 1999-ல் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் ரசிகர்களை அள்ளிக்கொள்ள ஆரம்பித்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அதன் பாடல்கள் இன்றைக்கும் கேட்கப்படுகின்றன. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு யுவனின் வளர்ச்சி நம்பமுடியாத வகையில் இருந்தது. பல வெற்றிப் படங்களுக்கு இவருடைய பாடல்கள் பக்கபலமாக அமைந்தன. 

தற்போது யுவனின் இசையில் பிரதீப் ரங்கனாதன் நடிப்பில் ‘லவ் டுடே’ படம் திரைக்கு வர உள்ளது. 

யுவன் 2014இல்  இஸ்லாம் மதத்தை தழுவினார். தனது பெயரை அப்துல் காலிக் எனவும் மாற்றினார். 2015ஆம் ஆண்டு ஷாப்ரூன் நிஷா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். 

இந்நிலையில் இஸ்லாமியர்கள் அணிந்து செல்லும் ஆடையுடன் மெக்கா புறப்பட்டுள்ளார் யுவன். அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT