செய்திகள்

ஆதிபுருஷ் வெளியீடு ஒத்திவைப்பு: என்ன காரணம்?

பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர்.

DIN

பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் ஒத்திவைத்துள்ளனர்.

பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி விமர்சனங்களை சந்தித்தது. ஹிந்து கடவுள்களை தவறாக சித்தரிப்பதாக பாஜகவினர் ஆதிபுருஷ் டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

மற்றொரு புறம் இந்தப் படத்தின் சிஜி காட்சிகள் கார்டூன் தொலைக்காட்சிகளை விட மோசமாக இருப்பதாக தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கிரித்தி ஷனோன் நடிக்க, சயீப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். 

இந்நிலையில், இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் மற்றும் வாரிசு, துணிவு படங்களுடன் மோதுவதைத் தவிர்க்கும் பொருட்டு அடுத்தாண்டு மே மாதத்தில் படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

EPS- உடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்கலாம் - TTV Dhinakaran

ஹாலிவுட் தொடரில் நடிக்கும் சித்தார்த்!

SCROLL FOR NEXT