செய்திகள்

‘ஒரு படத்திற்கு அதுவே விளம்பரம் என கூறிவிட்டு வருடத்தின் 365 நாளும் போட்டோ போடுவது எதற்கு?’- அஜித் குறித்து பிரபல விமர்சகர் தாக்கு!

DIN


நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்று கூறிவிட்டு தினமும் புகைப்படம் வெளியிடுவது எதற்கென நடிகர் அஜித் குறித்து விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். 

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

நடிகர் அஜித் தனது படங்களுகு ப்ரமோஷனுக்கு வருவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்து வந்தது. சமீபத்தில் அது குறித்து அவர் நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என கூறியிருந்ததாக தகவல் வெளியாகியது. ஆனால் தினமும் அவர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும். 

இது குறித்து பிரபல யூடியூப் விமர்சகரும், ஆன்டி இந்தியன் (anti indian) படத்தின் இயக்குநருமான ப்ளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு படத்திற்கு அதுவே விளம்பரம் என்று கூறிவிட்டு வருடத்தின் 365 நாளும் போட்டோவை இறக்கி விளம்பரம் தேடிக்கொள்வது சரியா? இதேபோல படத்தின் ப்ரமோ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்குமே. படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள், மகிழ்வார்களே” என பதிவிட்டு இருந்தார். 

இதற்கு அஜித் ரசிகர்கள், “இதெல்லாம் அஜித் மேல இருக்க பாசத்துல யாரோ அவருக்கே தெரியாம எடுத்து ரிலீஸ் பண்றது. இது எப்பிடி அவருக்கான ப்ரோமோஷனாகும்?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் விஜய், அஜித் ரசிகர்கள் இது குறித்து மீம்ஸ் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT