செய்திகள்

ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதிக்கு பெண் குழந்தை!

ஆலியா பட், ரன்பீர் கபூர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

DIN

ஆலியா பட், ரன்பீர் கபூர் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்தியில் பிரபலமான ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துக் கொணடனர். இருவரும் இணைந்து பிரம்மாஸ்திரா படத்தில் நடித்து வந்தனர். இப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் மாதம் வெளியானது. தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. 

ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் குழந்தையின் உருவத்தை கணினி பரிசோதனையில் கணவர் ரன்வீர் கபூருடன் சேர்ந்து பார்க்குமாறு ஒரு புகைப் படத்தினை பதிவு செய்து, “எங்கள் குழந்தை... விரைவில் வரவிருக்கிறது...” என ஜுன் மாதம் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று ஆலியா பட் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில், “எங்கள் வாழ்க்கையின் சிறந்த செய்தி இதுதான். எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோராக எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT