செய்திகள்

ஜப்பானிலும் வசூல் வேட்டை: ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் புதிய சாதனை 

DIN

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அல்லுரி சீதா ராமராஜூ (ராம் சரண்), கொமரம் பீம்(ஜூனியர் என்டிஆர்) என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து உருவாக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது.

இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். 

இந்தப் படம் தற்போது ஜப்பானிலும் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது. 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பணத்தில் 185 மில்லியன் யென் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விரைவாக இந்த வசூல் சாதனை படைத்த முதல் இந்தியப் படம் இதுதான். மேலும் 3வது அதிக வசூல் படைத்த படமாகவும் உள்ளது. முதலிடத்தில் ரஜினியின் முத்து. இரண்டாமிடத்தில் பாகுபலி 2. 

ராஜமௌலி அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு வைத்து இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT