செய்திகள்

23 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் இளையராஜா-ராமராஜன் கூட்டணி

23 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் நடிக்கும் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். 

DIN

23 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் நடிக்கும் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். 

தொன்னூறுகளில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜன், கடைசியாக 2012-ம் ஆண்டு வெளியான ‘மேதை’ படத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாமானியன் படத்தில் மீண்டும் நாயகனாக அவர் நடிக்கிறார்.

இந்த படத்தை ஆர். ராஜேஷ் இயக்க எட்சட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். 

மேலும் படத்தில் ராமராஜனுடன் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், மைம் கோபி உள்ளிடோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய  4 மொழிகளில் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் நடிக்கும் சாமானியன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். கடைசியாக ராமராஜன் நடிப்பில் 1999-ல் வெளியான அண்ணன் படத்திற்கு இளையராஜா இசைமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறு திருத்தப்பட்டது!

மதுப் புட்டிகளை விற்ற பெண் கைது

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

SCROLL FOR NEXT