செய்திகள்

ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார் ‘லவ் டுடே’ இயக்குநர்!

நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன். 

DIN

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தினை ரஜினி பாராட்டியுள்ளார். 

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார்.  சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரைவில் ரூ.50 கோடியைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரதீப் ரங்கநாதன். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

இதற்கு மேல் என்ன கேட்கப்போகிறேன்? சூரியனுக்கு பக்கத்தில் நிற்பது போல இதமாக இருந்தது. இறுக்கமான அணைப்பு, அந்த கண்கள், அந்த சிரிப்பு, அந்த ஸ்டைல் மற்றும் அன்பு. என்ன ஒரு மனிதர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்னுடைய படத்தைப் பார்த்து பாராட்டினார். அவர் கூறிய வார்த்தைகளை எப்போதும் மறக்க மேட்டேன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT