செய்திகள்

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் தலைவரானார் ஐசரி கணேஷ்!

இந்திய  டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் வெற்றி பெற்றார். 

DIN

இந்திய  டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் வெற்றி பெற்றார். 

சமீபத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் ஐசரி வேலனின் மகனும் வேல்ஸ் பல்கலை. வேந்தருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்திய  டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டேக்வாண்டோ என்பது ஒரு தற்காப்பு கலையாகும். 

தில்லி இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் நடைபெற்ற போட்டியில் ஐசரி கணேஷ் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சுப்பிரிய அவர்களை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். ஐசரி கணேஷ்க்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்பிரியாவிற்கு 15 மாநிலங்களும் ஆதரவு தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை புரிந்தவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உத்ஸவம் நாளை தொடக்கம்

மின்சாரம் பாய்ந்ததில் விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

போக்சோ வழக்கில் உணவக உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

வனப் பகுதியில் தாா்ச் சாலை அமைக்க வனத் துறை அனுமதி வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT