செய்திகள்

சமந்தாவின் ‘யசோதா’: மூன்று நாள் வசூல் இத்தனை கோடியா!

சமந்தாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘யசோதா’ படத்தின் மூன்று நாள் வசூல் விவரத்தினை படக்குழு அறிவித்துள்ளது.

DIN

சமந்தாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘யசோதா’ படத்தின் மூன்று நாள் வசூல் விவரத்தினை படக்குழு அறிவித்துள்ளது.

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இப்படம்,  நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியது. படத்திற்கான தணிக்கை சான்றிதழ் யு/ஏ கிடைத்துள்ளது. ஹாலிவுட் சண்டை பயிற்சியாளருடன் பயிற்சி எடுத்த விடியோக்களும் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் யசோதா திரைப்படம் முதல்நாளில் 6.32 கோடி வசூலித்தது. 3 நாளில் உலகம் முழுவதும் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில குண்டு எறிதல் போட்டி: காஞ்சிபுரம் மாணவருக்கு தங்கப் பதக்கம்

போடோலாந்து பிராந்திய கவுன்சில் தலைவராக ஹக்ராம மொஹிலாரி பதவியேற்பு

உ.பி.: ‘சட்டவிரோத’ மசூதியை தாங்களே இடித்து அகற்றிய முஸ்லிம்கள்!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொழில்நுட்பம்: வலைதளம் உருவாக்க அரசு திட்டம்!

தலைத்துண்டித்து ஒருவா் படுகொலை

SCROLL FOR NEXT