செய்திகள்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு பாடிய ‘அப்பத்தா' பாடல் இன்று வெளியீடு

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாகவுள்ளது. 

DIN

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாகவுள்ளது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு  வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைக்கா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

ஏற்கெனவே இந்த படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘அப்பத்தா’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை வடிவேலு பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலுக்கு பிரபுதேவா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT