செய்திகள்

அதர்வாவின் ‘பட்டத்து அரசன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா, ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள 'பட்டத்து அரசன்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சற்குணம். மேலும், களவாணி 2, டோரா, வாகை சூட வா, நய்யாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவரின் வாகை சூட வா படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில், நடிகர் அதர்வாவை வைத்து ஏற்கெனவே சண்டிவீரன் என்ற படத்தை இயக்கியுள்ள சற்குணம், மீண்டும் அதர்வாவுடன் இணைந்துள்ளார். லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஜிகேஎம் தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘பட்டத்து அரசன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

நடிகர் அதர்வாவும், ராஜ் கிரணும் கிராமத்து தோற்றத்தில் இருப்பது போன்று உள்ளது. ஆகையால், இந்த படமும் வழக்கம்போல் சற்குணத்தின் கிராமத்து பின்னணி கொண்ட கதையாகதான் இருக்கும் எனத் தெரிகின்றது.

இந்த படத்தில் ராதிகா சரத்குமாரும் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் ‘யு’ கிடைத்துள்ளது. இந்தப் படம் நவ.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?

தாணே: புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் மீட்பு

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம்புரண்டு விபத்து- 16 பேர் பலி

ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு: லோகா படத்தைப் பாராட்டிய ஆலியா பட்!

அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு!

SCROLL FOR NEXT