செய்திகள்

சசிகுமாரின் ‘காரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: பாடல்களும் வெளியானது!

சசிகுமார், பார்வதி அருண் நடித்துள்ள காரி படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் காரி. இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் சசிகுமாருடன் பார்வதி அருண், ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி, ஆடுகளம் நரேன், ரெடின் கிங்க்ஸ்லே, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை தற்போது கேட்கலாமென தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படம் நவம்பர் 25ஆம் நாள் வெளியாக உள்ளது. மேலும் இவரது ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் நவம்பர் 18ஆம் நாள் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வார இடைவெளியில் இரண்டு படங்கள் வெளியாக இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யார் வலிமையானவர் - பெண்களா? பாஜகவா? மமதா பானர்ஜி

பத்திரங்கள் மூலம் ரூ.1,905 கோடி திரட்டிய ஹட்கோ!

வங்கதேசத்தில் பிப்ரவரி 12-ல் பொதுத்தேர்தல்! ஷேக் ஹசீனா பதவி நீக்கத்துக்குப் பின்!

கோயில் குடமுழுக்குகளுக்கு தேதி குறிக்க லஞ்சம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

ஜோர்டான், ஓமன், எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!

SCROLL FOR NEXT