செய்திகள்

விஜய்யின் ’தளபதி 67’ ஓடிடி விற்பனை இத்தனை கோடிகளா?

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் ஓடிடி விற்பனை தொகை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் ஓடிடி விற்பனை தொகை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

முன்னதாக, இந்தப் படத்தில் காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது. காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் விஜய் படமாக தளபதி 67 இருக்கப்போகிறது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை 170 நாள்களுக்கு நடத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் அதன்பின் அடுத்தகட்ட பணிகளுக்காக 3 மாதம் வரை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமையை ரூ.160 கோடிக்கு பிரபல ஓடிடி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

SCROLL FOR NEXT