செய்திகள்

புதுப்பொலிவுடன் திரைக்கு வருகிறது ரஜினியின் ‘பாபா’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பாபா’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பாபா’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில், அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்ட படம் பாபா. இந்த படத்தை அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தை தொடர்ந்து நான்பாவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், முக்கிய வேடங்களில் ரியாஸ் கான், கவுண்டமணி, தில்லி கணேஷ், சுஜாதாம் நம்பியார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பாபா படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகளான நிலையில், மீண்டும் புதுப்பொழிவுடன் திரையில் வெளியாக தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், படத்தில் வரும் பிரபல பாடல்களான மாயா மாயா, கிச்சு கிச்சு, சக்தி கொடு ஆகிய பாடல்கள் டால்பி மிக்ஸ் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டுள்ளதாம்.

இந்த படம், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு நகராட்சியில் பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடை ஒதுக்கக் கோரிக்கை

நந்திபெண்டா எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

125 நாள்கள் வேலை திட்டம் சீா்குலைப்பு: பிப்.13-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பிப்.7-இல் தென் மண்டல திமுக நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்

பொதுத் தோ்வில் ஸ்கிரைப் பணிக்கு கல்லூரி மாணவா்கள்: கல்வித் துறை முடிவை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT