செய்திகள்

‘யோவ் ஜானி பிரஷர் போடாத...’: வாரிசு நடன இயக்குநரை கலாய்த்த தமன்!

வாரிசு படத்தின் நடன இயக்குநரை கலாய்த்து பதிவிட்ட இசையமைப்பாளர் தமனின் ட்விட் வைரலாகி வருகிறது. 

DIN

விஜய், ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ள இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது.

ரஞ்சிதமே பாடல் யூடியூபில் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் அடுத்த பாடலுக்கு வேற லெவலில் நடனம் அமைத்துள்ளதாக நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தெரிவித்திருந்தார். இதற்கு வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன், “யோவ் ஜானி பிரஷர் போடதாயா..” என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. 

விரைவில் வாரிசு படத்தில் இருந்து இரண்டாவது பாடலுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் டெய்கின்!

நீதிபதியை தாக்குவதா?வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கார்கே வலியுறுத்தல்!

பிளாக் நூடுல்ஸ்... நிகிதா தத்தா!

என்னவென்று சொல்வதம்மா... ராஷி சிங்!

பத்திரிகையாளர் சந்திப்பில் காந்தார படக்குழுவினர் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT