செய்திகள்

‘கோல்டு’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியானது! 

பிரேமம் இயக்குநரின் ‘கோல்டு’ படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 

DIN

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். 

'கோல்டு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது.  

இந்தப் படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பர் மாதம் 1ஆம் நாள் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீஸாக உள்ளது.

தற்போது இந்த படத்தின் தணிக்கை சான்றிதழ் விவரம் வெளியாகியுள்ளது. ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. திரைப்படம் 2 மணி நேரம் 45 நிமிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

மும்பை: சொகுசு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

SCROLL FOR NEXT