செய்திகள்

அவரா இவர்? ரம்யா பாண்டியனின் புதிய படங்கள்!

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிப் படங்களை பதிவிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது தாவணி அணிந்து வெளியிட்டுள்ள படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. 

DIN

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிப் படங்களை பதிவிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது தாவணி அணிந்து வெளியிட்டுள்ள படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. 

கடந்த வாரம் முழுக்க கருப்பு, வெள்ளை நிறங்களில் மார்டன் உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். 

அதிலும், வெள்ளை நிறத்திற்கு மாறி, உள்ளாடைகளை மட்டுமே அணிந்து அவர் பதிவேற்றிய புகைப்படங்கள், ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும், மறுபுறம் பெரிதும் விமர்சனத்திற்குள்ளாகின. 

மம்முட்டி நடிப்பில் உருவாகும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் தற்போது ரம்யா பாண்டியன் அறிமுகமாகவுள்ளார். 

தமிழில் 'டம்மி டப்பாசு' என்ற படத்தில் ரம்யா பாண்டியன் அறிமுகமாகியிருந்தாலும், 'ஜோக்கர்' படத்தின் மூலமே அனைவராலும் அறியப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ’ஆண் தேவதை’ படத்திலும், ’ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும்’  படத்திலும் நடித்திருந்தார் ரம்யா பாண்டியன்.

பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்டதன் மூலம் பரவலான ரசிகளர்களிடையே ரம்யா பாண்டியன் சென்றடைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சியில் வந்திருந்தாலும், சமூக வலைதளங்களில்தான் அவர் ரசிகர்களை பெருமளவு கட்டி வைத்திருக்கிறார். 

அவர்களுக்காகவே இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என இரண்டிலும் விதவிதமான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார் ரம்யா பாண்டியன். 

கடந்த வாரம் முழுக்க மார்டன் கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன், தற்போது தாவணிக் கனவுகளுக்கு மாறியுள்ளார். 

இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு எழுந்துள்ளது. ’அருமை, அட்டகாசம்..’ என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தாவணிக்கும், ரம்யா பாண்டியனுக்கும் தெரிவித்து வருகின்றனர். 

ரசிகர்களின் அமோக வரவேற்பால், ரம்யா பாண்டியன், இனி தாவணி, புடவை என பாரம்பரிய உடையணிந்து போட்டோ சூட்களை நடத்த வழிவகுத்துவிடுமோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

அயோத்தியில் காஞ்சி சங்கர மட சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயா்

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி

SCROLL FOR NEXT