செய்திகள்

பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் இணைந்தால் ரூ. 4,000 கோடி வசூலிக்கும்: சல்மான் கான்

பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் இணைந்து நடித்தால் எளிதில் ரூ. 3,000 முதல் 4,000 கோடி வசூலை எட்டும் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

DIN

பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் இணைந்து நடித்தால் எளிதில் ரூ. 3,000 முதல் 4,000 கோடி வசூலை எட்டும் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில்  மலையாளத்தில் வெளியான  லுசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ’காட்ஃபாதர்’ திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் சல்மான் கானும் நடித்துள்ளார். இந்த படத்தில் நயந்தாராவும் நடித்துள்ளார். இயக்கம் - மோகன்ராஜா. இசை - தமன். ஒளிப்பதிவு - நிரவ் ஷா.

இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சல்மான் கான் பேசுகையில்,

“பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால், அதிக ரசிகர்களுக்கு படம் சென்று சேரும். சிரஞ்சீவி ரசிகர்கள் என் படத்தையும், என் ரசிகர்கள் சிரஞ்சீவி படத்தையும் பார்ப்பார்கள். நாம் ரூ. 300 - 400 கோடி வசூலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால் எளிதாக ரூ. 3,000 - 4,000 கோடியை எட்ட முடியும்.

பலர் ஹாலிவுட் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், நான் தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

SCROLL FOR NEXT