செய்திகள்

மம்முட்டியின் 'ரோர்சாச்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மம்முட்டி நடித்த 'ரோர்சாச்' திரைப்படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது.

DIN

மம்முட்டி நடித்த 'ரோர்சாச்' திரைப்படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படமான 'ரோர்சாச்' வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று மம்முட்டி தனது சுட்டுரை பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நிசாம் பஷீர் இயக்கிய இந்த ஆண்டின் மிகவும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாகக் கூறப்படும் இப்படம், மம்முட்டி சொந்த தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர்  திரைப்படம்.

துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் கேரளத்தில் படத்தை விநியோகிக்க உள்ளது, ட்ரூத் குளோபல் பிலிம்ஸ் அதன் வெளிநாட்டு உரிமையைப் பெற்றுள்ளது.

மம்முட்டி தவிர, ஷரபுதீன், ஜெகதீஷ், கிரேஸ் ஆண்டனி, பிந்து பணிக்கர், சஞ்சு சிவராம், கோட்டயம் நசீர், பாபு அனூர், மணி ஷோர்னூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

'அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஓமனக்குட்டன்', 'இப்லிஸ்' போன்ற படங்களை எழுதிய சமீர் அப்துல், 'ரோர்சாச்' படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவாளராகவும்,   கிரண் தாஸ் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். படத்திற்கு மிதுன் முகுந்தன் இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் - புகைப்படங்கள்

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

SCROLL FOR NEXT