செய்திகள்

பொன்னியின் செல்வனை பாகுபலியுடன் ஒப்பிடக்கூடாது: பிரபல நடிகர் கருத்து

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாகுபலியுடன் ஒப்பிடக்கூடாது என பிரபல நடிகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

DIN

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாகுபலியுடன் ஒப்பிடக்கூடாது என பிரபல நடிகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது. 

நடிகர் நாகர்ஜூனா

பொன்னியின் செல்வன் படம் முதல் நான்கு நாள்களில் உலகளவில் ரூ. 230 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா ‘இரட்சன்: தி கோஸ்ட்’ படத்தின் புரோமோஷனுக்காக சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது, ‘ சென்னை எனக்கு சொந்த ஊர்போல. ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போது அதை உணர்கிறேன். மணிரத்னம் என்னை தமிழில் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியதால் நான் பிரபலமடைந்தேன். நான் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்திருக்கிறேன். அதையொற்றியே படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தையும் பாகுபலியையும் ஒப்பிட்டு பேசுபவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்’ எனறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X தளத்தில் Comment Off “கருத்து சுதந்திரம் பற்றி திருமா பேசுகிறார்!” அண்ணாமலை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT