செய்திகள்

பிக்பாஸ் நட்சத்திரங்களுடன் நடிகர் அஜித்தின் செல்ஃபி - பின்னணி என்ன ?

பிக்பாஸ் நட்சத்திரங்களுடன் நடிகர் அஜித் குமார்  எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

DIN

பிக்பாஸ் நட்சத்திரங்களுடன் நடிகர் அஜித் குமார்  எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் தற்போது வினோத் இயக்கும் துணிவு படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் அங்கு சுற்றுலா சென்றுள்ள பிக்பாஸ் நட்சத்திரங்களான பாவனி, அமீர் மற்றும் சிபி ஆகியோர் நடிகர் அஜித்தை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

நடிகர் அஜித்தும் பாவனி, அமீர் ஆகியோருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதனை அமீர் மற்றும் பாவனி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். நடிகர் அஜித்தை  என் அண்ணா என பாவனி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் வாரிசு படம் வெளியாகவிருப்பதால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்படக்கூடும் என்று திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT