செய்திகள்

இயக்குநர் வெங்கட் பிரபு தனது மகளின் படத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சி

இயக்குநர் வெங்கட் பிரபு தனது மகளின் படத்தை  பகிர்ந்துள்ளார். 

DIN

இயக்குநர் வெங்கட் பிரபு தனது மகளின் படத்தை முதன்முறையாக பகிர்ந்துள்ளார். 

மாநாடு, மன்மத லீலை படங்களின் வெற்றிக்கு பிறகு தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். தமிழிலும் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கவிருக்கின்றனர். 

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்றுவருகிறது. இன்னும் பெயரிடாத இந்தப் படத்தில் ஜீவா வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

இந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது மகள் ஷிவானியின் புகைப்படத்தை பகிர்ந்து, ''பிறந்த நாள் வாழ்த்துகள் என் உலகமே. உன் பிறந்த நாளில் உன்னை மிஸ் பண்றேன்'' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 45 லட்சம் செலவழித்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர் சுட்டுக் கொலை! ஏன்?

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

சமூக வலைதளங்கள் முடக்கம்! போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி! | Nepal protest

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

வைகோ தலைவராக தோல்வியைத் தழுவியிருக்கிறார்!மதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்! மல்லை சத்யா பேட்டி

SCROLL FOR NEXT