செய்திகள்

இந்த ஆண்டு டிவியில் ஒளிபரப்பாகும் தீபாவளி சிறப்பு படங்கள் என்னென்ன?

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் சிறப்பு படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் சிறப்பு படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் வரிசையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்றாக இருக்கும். 

90களின் குழந்தைகளிடம் கேட்டால் சிறிய வயதில் தீபாவளியின் போது தொலைக்காட்சியில் பார்த்த படங்களை மகிழ்வுடன் நினைவுகூர்வார்கள். இப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்பே  ஓடிடியில் புதிய படங்கள் வெளியாவதால் பழைய குதூகலம் இப்பொழுது இல்லை. 

ஆனாலும் என்னென்ன படங்கள் ஒளிபரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு மட்டும் குறையவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தீபாவளிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

தீபாவளி நாளில்  இந்த ஆண்டு சன் டிவியில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும், விஜய் டிவியில் கமல்ஹாசனின் விக்ரம், கலைஞர் டிவியில் நடிகர் சிவகார்த்திகேயனின் டான், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கேஜிஎஃப் 2 திரைப்படங்கள் ஒளிபரப்பாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT