விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
விக்னேஷ் சிவன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் நயன்தாராவும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகிவிட்டதாக பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா விதிகளை மீறினார்களா? இல்லையா? என சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் நடந்துவருகின்றன.
இது ஒரு புறம் இருக்க இந்த சர்ச்சைகள் எதைப் பற்றி கவலைப்படாமல் இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்களுக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி தெரிவித்துவருகிறார்.
அந்த வகையில் நடிகர் கார்த்தி விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு பூங்கொத்து அனுப்பி, பெற்றோர்கள் சங்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் நால்வரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், கார்த்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.